நற்பிட்டிமுனை அஸ்ரப் மைதான அபிவிருத்திக்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால்  ஒதுக்குவதாக தெரிவிக்கப் பட்ட 300 மில்லியன்  ரூபா  நிதி மூடி மறைக்கப் பட்டுள்ளது . மைதான அபிவிருத்தி தொடர்பாக நற்பிட்டிமுனை அரசியல் பிரமுகர் ஒருவரால்  அமைச்சரிடம்  ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டிருந்தன  இந்நிலையில் இன்று கல்முனையில் இடம்பெற்ற  அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் இந்த நிதிக்கு சிவப்புக்  கொடி  காட்டப் பட்டுள்ளது. மைதான அபிவிருத்திக்கு  300 மில்லியன்  நிதி கிடைக்காதென தெரிய வந்துள்ளது .
கல்முனைப் பிராந்தியத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பிரகாரம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனைப் பிராந்தியத்தின் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப் பட்டது.
இதில் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ஐ.எம்.முயினுதீன் உட்பட நகர அபிவிருத்தி அதிகார சபை, காணி மீட்புக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை என்பவற்றின் உயர் அதிகாரிகளும் துறைசார் நிபுணர்களும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர முதல்வரின் விசேட ஆலோசகர லியாகத் அபூபக்கர், மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், உள்ளூராட்சி உதவியாளர் எம்.எம்.சர்ஜூன் தாரிக் அலி  உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.,
இதன்போது மேற்படி ஒருங்கிணைந்த திட்டங்களின் பரிந்துரைகள், உத்தேச வரைபுகள், தொழில் நுட்ப ஆலோசனைகள் குறித்து நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் ரமேஷ் தெளிவுபடுத்தினார். இதன் போதே  நற்பிட்டிமுனை மைதான அபிவிருத்திக்கான 300 மில்லியன் ரூபா  விடயமும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக  அபிவிருத்தி  விடயங்களை முன்னெடுக்கின்ற போது  பிரதேச அரசியல்வாதிகளின் பிரசன்னம் இருந்திருக்க வேண்டும் . குறைந்தது  அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர் ,மாகாண  சபை உறுப்பினராவது இருந்திருக்க வேண்டும்  அவர்கள் இல்லாமல் முன்னெடுக்கப் படுகின்ற அபிவிருத்தி வேலை திட்டங்கள்  எந்தளவு சாத்தியம்  என்பதும் கேள்வியாக உள்ளது.


கருத்துரையிடுக

 
Top