இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால்  தையல்  பயிற்சி நிலையம் சமீபத்தில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தில்  திறந்து வைக்கப் பட்டது . இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையங்களின்   ஊடக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகள்  பயன்பெறவுள்ளனர். 

கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நிலயத்தை திறந்து வைத்தார் 

புடைவை மற்றும் ஆடைகள்நிறுவனத்தின்அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளர்  அன்வர் முஸ்தபா , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை தொகுதி இளைஞர்  அமைப்பாளர்  சி.எம்.ஹலீம் , மருதமுனை  நாவிதன்வெளி அமைப்பாளர்  சித்தீக் நதீர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொன்டனர்..


Post a Comment

 
Top