முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைக் கண்டித்தும் வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்பட்டுவரும் பாராபட்சங்ககை கண்டித்தும் வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லீம்களின் காணிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் சதி முயற்சிகளைக் கண்டித்தும் சாய்ந்தமருதில்  பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று (29) ஜூம்மாத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி இணைப்பாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  பொது மக்கள் கலந்து கொண்டனர் 


 

கருத்துரையிடுக

 
Top