(யு.எம்.இஸ்ஹாக் )
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை அம்பாறை மாவட்டத்தில் மேலும் வலுவுட்டும் வகையிலும் கட்சியின் செயற்பாடுகளை கிராமங்கள் தோறும் விரிவுபடுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் 
தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது சம்பந்தமாகவும் ஆதரவாளர்களுடனும் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வொன்று இன்றிரவு சாய்ந்தமருதில் உள்ள கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி இணைப்பாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது , கல்முனைக்குடி , மருதமுனை , மாளிகைக்காடு , சம்மாந்துறை , வரிப்பத்தாஞ்சேனை , இறக்காமம் , ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து  அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் மருதூர் அன்சாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர்நயீம் , மருதமுனை மைஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் சித்தீக் நதீர் , வரிப்பத்தஞசேனை பிரதேச  அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சலீம் மௌலவி , ஒலுவில் பிரதேச அமைப்பாளர் அப்துல் நிஸார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் அதிக எண்ணிக்கையான ஆதரவாளர்கள் அகில் இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான அங்கத்துவ விண்ணப்பப்படிவங்களை முன்னாள மேயர் சிராஸ் மீராசாஹிப் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top