மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்த இன்று  (26)செவ்வாய்க்கிழமை  இரவு 8.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவுநேர கடுகதி புகையிரத்தில் இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
மேற்படி சம்பவம் ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் இரவு  8.52 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த புகையிரதம் சிறிதுநேரம் குறித்த பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இளைஞனின் சடலம் புகையிரதத்தில் ஏற்றப்பட்டு வாழைச்சேனை புகையிரதநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது .
25வயது மதிக்கத்தக்க  குறித்த இளைஞன்  மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த மகேந்திரராசா என தெரிவிக்கப்படுகின்றது

கருத்துரையிடுக

 
Top