தமிழக முதல்வராக மீண்டும் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்றார் செல்வி ஜெயலலிதா ஜெயராம். 

முற்பகல் 11.09 மணிக்கு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்படி தமிழகத்தின் முதலமைச்சராக 5ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். 

முன்னதாக, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.யாகவும் முதலமைச்சராகவும் பதவி வகிப்பதற்கான தடை நீங்கியது. இன்றைய இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, பிரபு, சரத்குமார், சிவக்குமார் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். 


கருத்துரையிடுக

 
Top