அல்- கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்களே   உங்கள்  நிர்வனத்தினால்  வறிய  மக்களுக்கு  இன மத பேதம் பாரது , கட்சி பேதம் பாராது  பாரிய உதவிகளை செய்து வருகின்றீர்கள் .

குறிப்பாக  குடி நீர் வழங்குவதற்கு பாரிய உதவிகளை செய்து வருவதை அறிகின்றோம் . ஆனால்  உங்களால் செய்யப் படுகின்ற உதவிகளில் அரசியல் வாதிகள்  மூக்கை நுழைத்து  பெயர் வாங்கி வருகின்றனர். நீங்கள் செய்கின்ற தருமத்துக்கு நேர் விரோதமான செயலாக இது இருக்கின்றது. நீங்கள் இறைவனுக்காக செய்கின்றீர்கள் உங்களுக்கு பெயர் இல்லாவிட்டாலும்  பரவாயில்லை  அதனை  படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்

ஆனால் வறிய  மக்களுக்கு உதவுங்கள் என்று  உங்களிடம் உதவிகளை பெற்று வந்து  அரசியல் ஆதரவாளர்களுக்கு  மட்டும் வழங்குவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?
இவ்வாறான சம்பவங்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளன . அம்பாறை மாவட்டத்தில்  உங்கள்  அல்- கிம்மா நிறுவனத்தின் உதவியுடன்  வழங்கப் பட்ட குடி நீர் உதவி அரசியல் இலாபத்துக்காக செய்யப் பட்டுள்ளது .

இந்த விடயம் தொடர்பாக கல்முனை நியூஸ்  உங்களின் பதிலை பதிவேற்றம் செய்ய காத்திருக்கிறது . kalmunainews@gmail.lk  , kalmunainews1965@gmail.lk

கருத்துரையிடுக

 
Top