மண்டூர் 01 ஆம் வட்டாரத்தில் வசிக்கும்  சச்சிதானந்தன் மதிதயன் என்பவர்  இனந்தெரியாதவர்களால்  சற்று நேரத்துக்கு முன்னர் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப் பட்டுள்ளார்.

46 வயதுடைய  இவர்  நாவிதன் வெளி பிரதேச செயலகத்தில் சமுக சேவை உத்தியோகத்தராக கடமை புரிகின்றார் . சற்று நேரத்துக்கு  முன்னர்  மோட்டார் சிகளில் வந்த இனந்தெரியாத இருவர்  கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

சடலம் களுவாஞ்சிகுடி  வைத்தியசாலையில்  வைக்கப் பட்டுள்ளது . வெல்லாவெளி  பொலிசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top