மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும், கொலைக் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக்கோரியும் இன்று கல்முனையில் மாணவர்களினாலும், பெற்றோர்களினாலும் அமைதிப்பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் இப் பேரணியில் பங்குபற்றி தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
தங்கள் தங்கள் பாடசாலைகளிலில் இருந்து பதாதைகளை தாங்கியவாறு அமைதிப் பேரணியாக வந்த மாணவர்கள் கல்முனை பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுகூடி பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம்  மாணவர்களினாலும்,  தமிழ் பட்டதாரிகள் சங்க செயலாளரினாலும் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
வித்தியாவின் படுகொலையை கண்டித்து இன்று கல்முனை நகரத்தில் உள்ள வா்த்தக நிலையங்கள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டும் உள்ளன.இதே வேளை ஆர்பாட்டம் செய்வதற்கு நீதி மன்றத்தினால் தடை உத்தரவும் வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக

 
Top