(அப்துல் அஸீஸ்​ )




கல்முனை திவிநெகும வலய,வங்கி பிரிவுக்குட்பட்ட  உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கான 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும்  நிகழ்வு நேற்று  கல்முனை திவிநெகும வலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செயப்பட்ட 10 சிறந்த பெறு பேறுகளை பெற்ற  மாணவர்களுக்கு  க. பொ.த  உயர்தரத்தில் கல்வியை தொடரும் பொருட்டு முற்பணமாக தலா ரூபா 16000/-  வழங்கி  வைக்கப்பட்டது.

திவிநெகும வலய,வங்கி  முகாமையாளர் எஸ்.சதீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, திவிநெகும பிரதேச அதிகாரி எ.ஆர்.எம். சாலிஹ், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எ.எச்.லாகிர்   ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலக  அதிகாரிகள்,  திவிநெகும அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டனர்.


Post a Comment

 
Top