நாளை திங்கட் கிழமை கல்முனை பிரதேசத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . பாண்டிருப்பு பிரதேசத்தில் இருந்து பாடசாலை மாணவர்களும் ,பொது மக்களும்  கலந்து கொண்டு இந்த எதிர்ப்பை  தெரிவித்து கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜரும் கைய்யளிக்க உள்ளனர் 

நாட்டின் பல பாகங்களிலும்  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை  கண்டித்து  நடாத்தப் பட்ட  ஆர்ப்பாடங்களில்  பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  அவ்வாறன நிலை கல்முனை பிரதேசத்திலும் ஏறபட்டு விடக் கூடாதெனவும் தெரிவித்து  நீதி மன்ற தடை உத்தரவைப் பெறவிருப்பதாக கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர் . 
இதே வேளை  நாளை ஹர்த்தாலுக்கான அழைப்பும் பட்டதாரிகள் ஒன்றியத்தால் விடுக்கப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top