ஈரானில் இயங்கி வரும் ஆயத்துல்லா மராஇ அல் நஜசி எனும் தனிப்பட்ட ஒருவரின் நூல் நிலையத்தில் உலகமெங்கினும் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தோலிலும், மரப்பட்டைகளிலும் வேறு சில பொருட்களிலும் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்கு இற்றைக்கு இரண்டொரு வருடங்களுக்கு முன் அங்கு சென்ற மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் தமிழ் மொழி கையெழுத்து பனை ஓலை ஓட்டுச் சுவடி இல்லாதது கண்டு இலங்கையில் இயங்கி வரும் ஈரான் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழக தலைவரும் வதிவிட பிரதிநிதியுமான செய்யத் ஹமீத் றிசா ஹகீகி அவர்களோடு தொடர்புகொண்டு அவரின் அனுசரணையுடன் 03.06.2015 இல் மேற்படி நூல் நிலையத்தில் சேர்ப்பதற்காக ‘அருட்கொடை அண்ணல் நபிசீரு’ எனும் கையெழுத்து ஏட்டுச் சுவடியினை எடுத்துக் கொண்டு இன்று 31.05.2015ல் ஈரான் பயணமாகிறார்.

கருத்துரையிடுக

 
Top