தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளராக கடமையாற்றி வந்த ஒலுவிலைச் சேர்ந்த பொறியியலாளர் ஹைதர் அலியின்  இடமாற்றத்தை கண்டித்து ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளி வாயலில் இன்று வெள்ளிக்கிழமை  பகல் ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக வந்ததன் பின்னர்  முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் என்ற பெயரில் பழி வாங்கப் படுகின்றனர். இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஊர்களும் கண்டிக்கின்றன . 
இன்று  ஒலுவில் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
எங்கள் ஊர் முஸ்லிம் காங்கிரஸை 100 வீதம் ஆதரித்த ஊராகும். மு.கா கொண்டு வந்த அனைத்து திட்டங்களுக்கும் ஒத்தாசை வழங்கிய ஊரும் ஒலுவிலாகும். ஒலுவில் துறைமுகத் திட்டத்திற்கு ஒலுவில் மக்கள் ஆதரவு வழங்கியதன் காரணமாக மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஊரும் ஒலுவிலாகும்.
இவ்வூரின் முகவரியை கூறக்கூடியதும், ஊரை கெளரவிக்கக்கூடிய பதவியான பிராந்திய முகாமையாளர் பதவியினை வகித்து வந்த பொறியியலாளர் ஹைதர் அலி அவர்களை இடமாற்றியது மு.கா இவ்வூருக்கு செய்யும் தூரோகமாகும்.
இலங்கையில் நல்லாட்சி மலர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான அரசியல் பழிவாங்களுக்குள் உள்ளான ஊர் ஒலுவிலாகும். இப்பழிவாங்கல் மு.காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒலுவில் மு.கா ஆதரவாளர்களிடம் கலந்தாலோசனை செய்யாமல் இடமாற்றம் செய்ததை வன்மையாக கண்டிப்பதாகவும். உடனடியாக இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் மிகவும் வினயமாக மு.கா தேசிய தலைமையிடம் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Post a Comment

 
Top