இனந்தெரியாத நபர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது. 
ஒரு குழுந்தையின் தந்தையான சித்தீக் பவுசூன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். மனைவியையும், குழந்தையையும் பிரிந்து வாழந்து வரும் நிலையில், தொழில் வாய்ப்புக்காக சவுதிக்கு சென்று ஒரு வாரத்துக்கு முன்னரே தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இவர் அதிகாலை ஒரு மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தபோது மறைந்திருந்த சிலர் அவரின் கழுத்தை அறுத்தனர் எனக் கூறப்படுகின்றது. அவர் அபயக்குரல் எழுப்பியதைக் கேட்டு அவரின் பெற்றோர் வெளியே வந்தபோது குற்றுயிராய் கிடந்தவரை உடனடியாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் செலலும் வழியிலியே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரிடி.எம்.ஜே.தஹநக தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத போதும் குடும்பப் பகை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top