19 ஆவது அரசியல் அமைப்பின் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்படும்  அரசியலமைப்பு சபைக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இதுவரை பெயரிடப் படாமை தொடர்பில் அதிருப்தி  தெரிவிக்கப்படுகிறது .
அரசியலமைப்பு சபைக்கு  உறுப்பினர்களாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவும், சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தமது அதிர்ப்தியை தெரிவித்துள்ளன .அதேவேளை சுயாதீன அமைப்புக்களைச் சேர்ந்த மேலும்  சிலர் உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபைக்கு உள்வாங்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

 
Top