அரச கரும மொழி தேர்ச்சி எழுத்துப் பரீட்சை 2014 (2015) சிங்களம் /  தமிழ் மட்டம் I, II,III னை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரச கரும மொழி தேர்ச்சி எழுத்துப் பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியாக 505 மத்திய நிலையங்களில் 65 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இந்தநிலையில், பரீட்சைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை பெறாத விண்ணப்பதாரிகள் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தை அணுகி கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top