கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும், மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக் கிழமை  கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் யூ.எல்.ஏ.கரீம்  தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12 கழகங்கள் கலந்துகொள்கின்றன. போட்டிகள்  12 நாட்கள் இடம்பெறவுள்ளது .

போட்டியின் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  கலந்து கொண்டு  போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.  கௌரவ அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ,டபிள்யூ.ஏ.கப்fபார் , கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்  நிறைவேற்றுப் பொறியலாளர் ஏ.எம்.எம்.ஜாபீர் ,மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் சமீம் அவர்களது சகோதரர் எம்.ஐ.எம். அப்துல் றவூப் , கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.றியாஸ் மற்றும் எம்.எஸ்.உமர் அலி போன்றோரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளரும்  சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச்செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களது வழிநடத்தலில் ஆரம்பமான மேற்படி மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அப்துல் சமீம் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்-2015 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு, அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கத்தின் உபதலைவரும்  சுற்றுப்போட்டி குழு தவிசாளருமான யூ.எல்.றமீஸ் , அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவரும் மத்தியஸ்த்த குழு தலைவருமான எம்.எல்.எம்.ஜமால்தீன், சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா  போன்றோரும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

முதல் நாள் போட்டி மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக்கழகத்துக்கும் ஏறாவூர் வை.எஸ்.சீ.விளையாட்டுக் கழகத்துக்கும் இடையே இடம்பெற்றது.
 போட்டியில் வை.எஸ். எஸ்.சீ.விளையாட்டுக்கழகம் ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டுக்கழகத்தை வெற்றி கொண்டமை  குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

 
Top