(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உயர்தர மாணவர்கள் பங்குபற்றிய கிரிக்கட் சுற்றுப் போட்டி அண்மையில் (14-05-2015)கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இதில் 2015ம்இ2016ம்இ2017ம் ஆண்டுகளில் உயர்தரப் பரிட்சைக்குத் தோற்றும்  மாணவர் அணிகள் பங்குபற்றின.
இச் சுற்றுப் போட்டித் தொடரில் 2015ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றும் கணிதப் பிரிவினர்    1ம் இடத்தையும்,2017ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றும் கணிதப் பிரிவினர் 2ம் இடத்தையும் பெற்றனர்  
பரிசளிப்பு நிகழ்வு  அதிபர் எம்.எஸ்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற போது ஆசிரியர் ஜே.எம்.நியாஸ், மிமா அமைப்பின் தலைவரும் ,ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான என்.எம்.அனீஸ் அஹமட். ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்ரப்,மற்றும் உதவி அதிபர்கள்.ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

 
Top