அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காரைதீவு பிரதான வீதியில் இயங்கிவரும் மதுபானசாலையை அகற்றுமாறும், அத்துடன் மதுபானசாலை அனுமதியை நிறுத்துமாறு கோரியும் இன்று புதன்கிழமை மாபெரும் சாத்வீகப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. 

காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த சாத்வீகப் போராட்டத்தை நடத்தின. காரைதீவு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர்.

 காரைதீவைச் சேர்ந்த 117 சமய, சமூக நிறுவனங்களின் சார்புடனும், பங்குபற்றுதலுடனும் இடம்பெற்ற இந்த சாத்வீகப் போராட்டத்தில் காரைதீவைச் சேர்ந்த கல்விமான்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்திருந்தனர்.Post a Comment

 
Top