தங்களின் பதவி இலக்குகளை ஓரம் கட்டிவைத்துவிட்டு மக்களுக்காக பேரம் பேசுகின்ற தன்மானமிக்க அரசியல் தலைவர்களாக மாறுவதற்கு இன்றைய முஸ்லீம் அரசியல் தலைமைகள் முன் வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகொள் விடுத்தார. 
கல்முனை பிரதேச செயலக திவிநெகும பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 118 திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய நிகழ்வு நேற்று முன்தினம் (01-12-2014) மாலை கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்.
இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும,; திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தார்.
32 இலட்சத்து 75000 ரூபா நிதியில் 45 சோஜி,31 சிக்சாட் 42 சாதாரன சிங்கர் ஆகிய ரகங்களைச் சார்ந்த தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்,ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, மற்றும் கல்முனை பிரதேச செயலக திவிநெகும அதிகாரிகளான ஏ.சி.அன்வர்,எஸ்.எஸ்.பரீரா உள்ளீட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொணடனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் உரையாற்றுகையில்:- இன்றைய அரசியல் வாதிகள் தங்களுடைய தகுதிகளை உயர்த்திக் கொள்வதில்தான் அக்கறை காட்டுகின்றார்கள் பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்கான வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லலை.

அரசாங்கம் முஸ்லீம்களுடைய உரிமை சம்பந்தப்பட்ட விடையங்களை விட எங்களுடைய தனிப்பட்ட விடையங்களைத் தீர்த்துவைப்பதற்கே ஆயத்தமாக இருக்கின்றது.
இன்று சர்வதேச மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற ஜனனாயக அரசு வேண்டும் என்பதில்தான் மக்கள் அக்கறையாக இருக்கின்றார்கள். இன்று சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன்களில் அக்கறைகாட்டுகின்ற அரசயே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
வெறும் பகட்டு அரசியலால் ஒரு சமூகத்துடைய உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாமல் அரசியலுக்காகவே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் மக்கள் மாறிவிட்டார்கள் அரசியல் தலைமைகளும் மாற வேண்டும்.
அரசியலிலே நான் எடுக்கின்ற முடிவுகள் முஸ்லீம் சமூகத்திற்குப் பயன்படக் கூடியதாகவே இருக்கும். அதே நேரம் முடிவுகள் எடுக்கின்ற போது அபிவிருத்தி,நிருவாக விடையம் தொடர்பில் எந்தப் பாதிப்பும் வராத வகையில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
முஸ்லீம்களின் துஆப் பிரார்த்தனை மிகவும் பலமானது இதை இறைவன் அங்கீகரிப்பான் எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top