கல்முனை  மாநகர சபையின் மரணக் குழியை ஹரீஸ் MP   இன்று பார்வையிட்டு  மாநகர சபை இப்போது அமைத்திருக்கும் பாது காப்பு வேலியை  ஏற்கனவே அமைத்திருந்தால்  அநியாயமாக ஏழை சிறுவனின் உயிர்  பலியாகி இருக்காது  என அங்குள்ள மக்களிடம் தெரிவித்தார் .  

கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப் படும் இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்திற்கான மலசல கழிவகற்றல் தொகுதி அமைப்புக்காக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை அப்பகுதியை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஒருவன் அக்குழியில் விழுந்து உயிரிழந்தார் .

இந்த இடத்தைப் பார்வையிட்ட ஹரீஸ் MP   மீண்டும் கல்முனை மாநகர சபை நிருவாகத்தின் மீது தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார் . அத்துடன் மரணமடைந்த சிறுவனின் குடும்பத்துக்கு மாநகர சபை நஷ்டஈடு  வழங்குவதை துரிதப் படுத்த வேண்டும் என தெரிவித்த ஹரீஸ் சிறுவனின்  குடும்பத்தவரை சந்தித்து ஆறுதல் கூறினார் .

Post a Comment

 
Top