கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டிலும் சொண்ட் அமைப்பின் உதவியுடனும் அரச,அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களுக்கான கருத்தரங்குநேற்று  கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வூ.ஜெயசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கருந்தரங்கில் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார். 
இக்கருத்தரங்கில் விவசாயம், மனித சுகாதாரம், மீன்பிடி போன்றவற்றில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் எதிர் நோக்கும் சாவால்கள் போன்ற விடயங்களும், காலநிலை மாற்றம் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கங்கள், தரைத்தோற்றமும் -காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் போன்ற விடயங்களும் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.சுதர்சன், வைத்திய கலாநிதி மு.நு .கருணாகரன், கலாநிதி பேராசிரியர் P.வினோபவா ஐ.எஸ் .ஜெயசங்கர், திரு சு.கிருபைராஜா ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது. இறுதியாக கருத்துப்பறிமாறல்கள் இடம்பெற்றதுடன் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு எஸ் .செந்தூராசா வின்  நன்றி உரையுடன் நிறைவுற்றது.கருத்துரையிடுக

 
Top