ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிபடுத்தவே தாம் இவ்வாறு ஆளும் கட்சியுடன் இணைந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு அலரி மாளிலைக்குச் சென்ற போதே ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதியை சந்தித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேரிதலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் பாடுபடுவதாக இந்த சந்திப்பின் போது திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ,சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவரான ஜயந்த கெட்டகொடவும் இன்று பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

 
Top