விளையாட்டுத்துறையில் மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்த கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. 

பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அதிபர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது மெய்வல்லுனர், செஸ், கராட்டே, கிரிக்கெட் போட்டிகளில் மாகாண மற்றும் தேசிய ரீதியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ வீரர்கள் நினைவுச் சின்னம் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர். 

இதில் அதிதிகளின் சேவைகளையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

 
Top