(சுரேஸ்)
பாலன் பிறப்பை முன்னிட்டு உலகளாவிய ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் பல்வேறுபட்ட நிகழ்வுகளை கொண்டாடுகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த கரோல் சேவை மற்றும் ஒளிவிழா நிகழ்வு அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி .டீ.டீ.டேவீட் தலைமையில் உள்ளக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அமைப்பின் தலைவர் வீ.டீ. செகராஜசிங்கம் , உப தலைவர் எஸ்.பி.ஆனந்தராஜா, சிலோன் தேவாலயத்தின் பாதிரியார் எஸ்.பீ.நேசகுமார் மெதடிஸ்த திருச்சபையின் உபதலைவர் வீ.பிரபாகரன் மற்றும்வை.எம்.சீ.ஏஅமைப்பின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உட்பட பலரும்கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top