கிழக்கு மாகாண சபை பிரதிப் பிரதம செயலாளரால் (நிர்வாகம்) திருக்கோயில் கல்வி வலயத்தில் கடமையாற்றிய ஆறுமுகவடிவேல் முகுந்தன் என்பவரை ஆலயடிவேம்பு பிரதேச சபைக்கு இடமாற்றம் பிறப்பித்த கட்டைளைக்கெதிராக கல்முனை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிகேள் ஆணை வழக்கில் அவருடைய இடமாற்றக் கட்டளையானது சட்டமுரணானது. இயற்கை நியதிக்கோட்பாட்டுக்கு முரணானது என நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
 அத்துடன் கிழக்கு மாகாண சபை பிரதி பிரதம செயலாளரின் கட்டளையை ரத்துச்செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிக்கப்பட்ட மனுதாரர் ஓராண்டு முன்னரே திருக்கோயில் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடமாற்ற விண்ணப்பம் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் அவருக்கெதிராக 3 அநாமதேய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனடிப்படையில் அவருடைய இடமாற்றம் நடைபெற்றதாக பிரதிச் செயலாளர் மன்றில் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.
 குறிக்கப்பட்ட வழக்கானது கிழக்கு மாகாண சபை ஆளுநர், கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபை பிரதிப் பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சின் செயலாளர், திருக்கோயில் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Post a Comment

 
Top