கல்முனை உவெஸ்லி  கல்லூரி மாற்று திறனாளி மாணவர்களின் தின விழா இன்று  கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது.

கல்லூரி அதிபர் வீ .பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,மெதடிஸ்த திருச் சபை  மாவட்ட தவிசாளர் அருட் பனி எஸ்.டி .தயாசீலன் ஆகியோரும், விசேட அதிதிகளாக சர்வோதய இணைப்பாளர் வீ.ஜீவராஜ் ,கல்முனை செலான் வங்கி கிளை முகாமையாளர் திருமதி பிறேமினி மோகனகுமார்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
விசேட தேவையுடைய மாணவர்களின்  கலை நிகழ்வுகளும் ,ஆசிரியைகளின் சிறப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் அதிபர் பிரபாகரன் பழைய மாணவர்களால் நிகழ்வில் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது .கருத்துரையிடுக

 
Top