கல்முனை வலயக் கல்வி அலுவலகதுக்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் முறைசாரா கல்விப் பிரிவின் ஏற்பாட்டில்  முறை சாரா கல்விப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்கப் தலைமையில் நேற்று கல்முனை வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதியாகவும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக்,கணக்காளர் எல்,ரீ.சாலிதீன் ஆகியோர்  கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர் . கல்முனை கல்வி வலயத்துக்கு ஜெய்க்கா  நிறுவனத்தால் விசேட தேவை கல்விக்காக தொண்டராக நியமிக்கப் பட்டுள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த செல்வி சௌரி சிறப்பதிதியாக கலந்து கொண்டார் .


Post a Comment

 
Top