எஸ்.எம்.எம்.ரம்ஸான்
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையினால் கல்முனை மாநகர சபைக்குற்பட்ட பிரதேசங்களின் பல இடங்கள் மழைநீர் தேங்கிக் வீதிகளிலும், வீடுகளினுள்ளும் காணப்படுகின்றது.
நேற்றிரவு திடீரென பெய்த மழையினால் பல வீடுகளும், வீதிகளும், பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய ஊர்களைவிட கல்முனைக்குடி  அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பிரதான காரணமாக கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சாகிபு வீதி வடிகான், நடராஜா வடிகான் மற்றும் பழைய தபாலக வீதி வடிகான்கள் என்பவற்றின் வேலைகள் மிக நீண்ட காலமாக முடிவுறுத்தப்படாமல் இருப்பதோடு ஊருக்குள் இருக்கும் ஏனைய வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமையும் சரியாக பராமரிக்கப்படாமையுமே காரணமாகும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொருவருடமும் மாரிகாலத்துவக்கத்திற்கு முன்னர் இவ்வடிகாண்கள் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களைப் போன்று கல்முனை மாநகர சபையினால் துப்பரவு செய்யப்பட்டிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

காலத்துக்குக்க காலம் வரும் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக எங்கள் வீடுகளின் படிகளில் ஏறும்போது வழங்கும் வாக்குறுதிகளுடன் அவர்களையும் இன்று காணமுடிவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


கருத்துரையிடுக

 
Top