பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிடம் மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) பி.ப 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரம ஆராச்சி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைக்கவுள்ளார்.

இதில் கல்முனை மாநரக சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநரக சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்;, கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மசூறாக் குழுத் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.ஏ.கரீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் கல்முனைக்குடி ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top