சுரேஸ்
‘போசாக்கான உணவுப்  பழக்கம் வாழ்வின் ஒரு உற்சாகமானசெயற்பாடாகும்’ எனும் தொனிப் பொருளில் டைய கொணியா மற்றும் எகட் கரிடாஸ் அமைப்புக்கள் நடைமுறைபடுத்தும் செயற்திட்டத்தின் மண்முனைமேற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ ,மாணவிகளுக்கான உணவும் அதன் போசாக்குதன்மைகள் தொடர்பான கண்காட்சியும் வழிகாட்டல் கருத்தரங்கும் மண்முனை மேற்கு கன்னங்குடா
மகாவித்தியாலத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கரிடாஸ் அமைப்பின் திட்டஉத்தியோகத்தர்  பற்றீக் செல்லதுரைதலைமையில் நேற்று  04 நடைபெற்றது.
இதன் ஆரம்பநிகழ்வின் உணவு போசாக்கில் உள்ளுரில் பெறக் கூடிய போசாக்கு உணவு தெரிவுகள் அதன் நன்மைகள் சம்மந்தமாக ஆயித்தியமலை ,மகிழவெட்டுவான் ,பாவற்கொடிச்சேனை ஆகியகிராமங்களின் சமூகமட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி நடைபெற்றது.
ஆரோக்கியமான வாழ்வின் எவ்வாறான உணவு வகைகளை தெரிவு செய்வது பற்றிமட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் போசனைவியலாளர் எஸ்.நமோநிதிபல ஆலோசனைகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top