சுரேஸ்

சித்தாண்டி வானவில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் அனுசரணையில் நலிவுற்ற பெண்களை வலுவூட்டல் எனும் கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் ஒரு பகுதியான சித்தாண்டி ,மாவடிவேம்பு ஆகியபிரதேசத்திற்குட்பட்ட  இளைஞர் யுவதிகளுக்கான இரண்டுநாள் தலைமைத்துவ பயிற்சி சித்தாண்டி ஆலயத்திற்குரிய பொதுக் கட்டிடத்தில் வை.எம்.சீ.ஏஅமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர்  சீ.லோஜனி தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் பயிற்றுவிப்பாளராக கே.அருள்சிவா கலந்து கொண்டதுடன் வை.எம்.சீ.ஏஅமைப்பின் சித்தாண்டி மாவடி வேம்பு சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆர் .ரதிகலா,சி.சுமதிஆகியோர்  கலந்து கொண்டதுடன் பயிற்சியின் இறுதி நாள் பயிற்சி நடைபெற்ற இடத்தில் இளைஞா; யுவதிகளினால் சிரமதானம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top