( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனைப்பிரதேசத்தில் நேற்று இரவு 12 மணி முதல் தெடர்ச்சியாக  4 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக அதிகமான வீடுகளினுள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப் பட்டுள்ளது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும் இந்த மக்களை பார்வை இடவுமில்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர் .

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனைப் பகுதியில் வடிகான்கள் சீரற்றுக்காணப்படுவதனாலேயே இந்நிலை தோண்றியதாகவும் அதை உரியவர்கள் சீர் செய்கிறார்கள் இல்லையெனவும் ஒவ்வெரு வருடமும் மாரிகாலம் வந்தால் கல்முனை மாநகரகத்துக்குட்பட்ட  மற்ற ஊர்களை விட நாங்கள் இவ்வாறான பிரச்சினைகளை தொடர்ந்தும்  எதிர் நோக்குவதாகவும்   மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் . 

கருத்துரையிடுக

 
Top