ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும்   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான    பஸில் ராஜபக்‌ஷவுக்குமிடையிலான  முக்கிய சந்திப்பொன்று நாளை    வௌளிக்கிழமை நடைபெறவுள்ளது.

 பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவரும் நீதிமைச்சருமான ரஊப் ஹக்கீம் ,செயலாளர் நாயகம் ஹஸனலி உட்பட கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் யரை ஆதரிப்பது என்ற தீர்மானத்திற்கு இன்னும் வராத நிலையில் கடந்த சனிக்கிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையிலான சந்திப்பொன்றும் இடம் பெற்றிருந்தது.


இதன் தொடராகவே நாளைய  சந்திப்பும் இடம் பெறவுள்ளதாகவும் இந்த  சந்திப்பில் எட்டப்படுகின்ற தீர்மானங்களைப் பொறுத்தே தொடர்ந்தும் அரசுக்கான ஆதரவை வழங்குவதா இல்லையா என்ற முடிவுக்கு கட்சி வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். 

Post a Comment

 
Top