தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து தகுதி பெற்றோருக்கான வாக்காளர் அட்டைகள் அடங்கிய பாதுகாப்புப் பொதி இன்று (15) தபாலில் இடப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்பிற்கு 6 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில் 548,000பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்குகள் 23- 24ஆம் திகதிகளில் பதிவு செய்யப்படவுள்ளன. அத்தினங்களில் வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் 30ஆம் திகதி அந்தந்த மாவட்டங்களிலுள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று வாக்கிளக்க முடியும்.

கருத்துரையிடுக

 
Top