(அப்துல் அஸீஸ் )

தேசிய மற்றும் கிழக்கு மாகாண கலை கலாசார போட்டியின்  முன்னோடியாக கல்முனை பிரதேச கலை கலாசார பிரிவினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசு  வழங்கி கெளரவிக்கும்  நிகழ்வு நேற்று(3)கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 திறந்த மற்றும் பாடசாலை மட்டங்களில்  பாடல், கவிதை, கதை, நாட்டார் பாடல்,சித்திரம்  போன்ற பலதுறைகளில் வெற்றிஈட்டிய 75 போட்டியாளர்கள்  பரிசு  வழங்கி கெளரவிக்கப்கப்பட்டனர்.

பிரதேச செயலக கலை கலாசார உத்தியோகத்தர்  திருமதி வி.பற்பராசா தலைமையில்  இடம்பெற்ற இந்  நிகழ்வில் அதிதியாக பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி  கலந்துகொண்டதுடன்,பிரதேச செயலக அதிகாரிகள்,பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்துகொன்டனர்.


Post a Comment

 
Top