(ஹாசிப் யாஸீன்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட நுளைவாயில் மற்றும் சுற்றுமதில் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு  இன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர்  எம்.எஸ்.நபார்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார் 

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்முனை மாநகர பிரதி முதல்வர்  ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.ஏ.றகுமான், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பசீர் , ஏ.நசார்தீன் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் 

இதன்போது இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புறக்கீர்த்திய  செயற்பாடுகளில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

வைபவத்தில்  பாடசாலையின் அபிவிருத்திற்கு பங்காற்றி வரும் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸின் சேவையினைப் பாராட்டி பாடசாலை சமூகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் .
கருத்துரையிடுக

 
Top