ரபாய்டீன்பாபு  ஏ .லத்தீப் 
திருகோணமலை-ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் கலைவிழாவும் -புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நடை பெற்றது.

அனுராதபுர மாவட்ட எல்லைக்கிராமமான ரொட்டவெவ கிராமத்தில் இம் முன் பள்ளி பாலர் பாடசாலை அமைக்கப்பட்டு   சிறந்த முறையில்  நடாத்தப்பட்டு வருவது தமக்கு  மன சந்தோசத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் அதிபர் ஒ.ஏ.ரஹீம் தனது உரையில் குறிப்பிட்டார்.
இப்பாலர் பாடசாலையின் ஸ்தாபகர் அப்துல்சலாம் யாசீம் தனது உரையில்   சிறார்களின் கல்வி நடவடிக்கைகளில் அனைவரும் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி -தம்மிக விஜயசிங்க -சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளான அணில் சுவர்ணவீர -கே.ஜி.முத்துபண்டா -ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளி வாசல் பேஷ் இமாம் நசார்தீன்-மற்றும் ஹொரவ்பொத்தான முஸ்லிம் மஹா  வித்தியாலயத்தின் அதிபர் இசாக் - ஆகியோர் கலந்து கொண்டதுடன் கிராம மக்களும் கலந்து சிறப்பித்தனர் .


கருத்துரையிடுக

 
Top