(ஏ.எல்.எம்.சலீம்-சிரேஸ்ட ஊடகவியலாளர்)
கண்டியில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கூட்டத்தில்  இதுவரை  எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை . ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகமும்,பாராளுமன்ற உறுப்பினருமான   ஹசனலி , சிரேஸ்ட பிரதி தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான அப்துல்  மஜீத் ஆகியோரிடம் கேட்ட போது  அவசரப்பட்டு எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசை விட்டு வெளியேறும் தீர்மானமோ மைத்திரி பால சிறி சேனாவுக்கு ஆதரவு வழங்குவதாகவோ   சில பத்திரிகைகள் குறிப்பிடுவது போன்று  அவசரப்பட்டு முடிவு எதுவும் எடுக்க முடியாது  . பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி  பொய்யானது எனவும்  அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
நாளை ஜனாதிபதி மாளிகையில்  முக்கியமான அமைச்சர்கள்  சந்தித்து பேசியதன் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உயர் பீடம் கூட்டப் பட்டு   உயர் பீடம் வழங்கியுள்ள ஆணைப் படி தீர்மானம் எடுக்கப் படும் எனவும் அதற்கு சில  நாட்கள் தேவைப் படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர் .இதே வேளை  விளக்கில் விட்டில் பூச்சிகள் விழுந்து மாள்வது போல் முஸ்லிம் மக்களை பலிக்கடாவாக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுக்காது என்று சிரேஸ்ட பிரதி  தலைவர் அப்துல்மஜீத் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top