கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி
(சிரேஸ்ட  ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் )

2015 ஜனவரியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் காரியாலயத் திறப்பு  விழா இன்று மாலை (2014-12-10) மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பழைய மக்கள் வங்கிக் கட்டிடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. தலைமையில் இந்தக் காரியாலயத் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியல் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர,கௌரவ அதிதியாக மகநெகும தவிசாளர் சிரேஸ்ட சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, சிறப்பு அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்துவைத்தனர் .
இந்த நிகழ்வில் இப்பிரதேச மக்கள் கலந்து கொண்டனர் கிழக்கு மாகாண அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான  இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. இங்கு தலைமை உரையாற்றுகையில்:-முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச அவர்கள்தான்.
இவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய பொறுப்பு இந்த நாட்டுமக்களுக்கு இருகின்றது. இந்த நன்றியை எதிர் வரும் 2015 ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் போது  மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்து மக்கள் நன்றிக் கடன் தீர்க்க வேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிட்டாலும் 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று 3வது முறையாகவும் வெற்றி பெறப்போவது ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச அவர்கள்தான். அந்த வெற்றியில் இந்த நாட்டில் வாழ்கின்ற நன்றியுடைய மக்கள் பங்காளிகளாக வேண்டும். 
இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாகாமல் இருக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச அவர்களை 3வது முறையாகவும் வெற்றிபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு  இந்த நாட்டிலே வாழ்கின்ற சிங்கள,தமிழ்,முஸ்லீம் மக்களுக்கு இருக்கின்றது. 
பயங்கரவாதத்தால்  அழிந்து கிடந்த வடக்கு.கிழக்கு உட்பட இந்த நாட்டை பத்து வருடங்களுக்குள்  அபிவிருத்தி செய்து சாதனை படைத்து இன்று நாங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சந்தோசமாகச் சென்று வருவதற்கு வழிசமைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச அவர்கள்தான் என்பதை யாரும் மறந்து விடமுடியாது என இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. மேலும் தெரிவித்தார்.   









கருத்துரையிடுக

 
Top