முன்னாள் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர் அலி நியமிக்கப்பட்டுள்ளதோடு அவர் எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொருளாளர் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. தனது எம்.பி. பதவியை அண்மையில் ராஜினாமா செய்திருந்தது தெரிந்ததே.

கருத்துரையிடுக

 
Top