வாழ்வின் எழுச்சி வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 118 குடும்பங்களுக்கு 32 இலட்சத்து 75 ஆயிரம்  ரூபாய் பெறுமதியில் வாழ்வாதார உதவிகள் இன்று திங்கட் கிழமை வழங்கப்பட்டன. 

இதன்போது 118 குடும்பங்களுக்கும் தையல் இயந்திரங்கள்  வழங்கப்பட்டன.கல்முனை  பிரதேச திவிநெகும தலைமைப்பீட அதிகாரி ஏ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் , கல்முனை மாநகர சபை   உறுப்பினர்களான  சட்டத்தரணி ரகீப் , முஸ்தபா, உமர் அலி  உட்பட , கல்முனை பிரதேச செயலக   திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி எஸ்.எஸ்.பரீரா ,திவி நெகும திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர், திவி நெகும வங்கி முகாமையாளர்  எம்.எம்.எம்.முபீன்   உள்ளிட்ட கருதிட்டங்களுக்குப் பொறுப்பான திவி நெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.எம்.தௌபீக்  திவி நெகும சமுக அபிவிருத்தி மன்ற உதவியாளர் என்.எம்.நௌசாத்  உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .கருத்துரையிடுக

 
Top