(ஐ.எல்.எம்.ரிஸான்)


அட்டாளைச்சேனை  கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 07 வருட மௌலவிக் கற்கையை நிறைவு  செய்த உலமாக்கள் 07 பேர் அண்மையில் பட்டம் பெற்று வெளியேறினர் .
இவர்களுக்கான விடுகை விழா நிகழ்வு  கல்லூரி கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மௌலவிகள் எம்.பி.ஹகீம் அஹ்மட், கே.முகம்மட் றிஸ்லி, என்.எம்.முகம்மட் ஸனா, ஏ.எம்.முகம்மட் பௌஸான். எஸ்.எம்.ஸஹீப் ஹஸன், எம்.ஏ.முகம்மட் ஹாஸிம், எல்.அபுல் ஹூதா ஆகியோர்  கல்லூரி  அதிபர்  மௌலவி ஏ.எல்.எம்.ஹாஸிம், ஆளுனர் சபை செயலாளர்  மௌலவி யூ.எம்.நியாஸி, உப செயலாளர்  யூ.எம்.சகீது விரிவுரையாளர்களான மௌலவிகள் எஸ்.எல்.ஏ.றஸ்ஸாக் என்.ரீ .நஸீர்  ஏ.ஆர் .எம்.றிழ்வான், யூ.எல்எம்.அஸ்லம் ஆகியோரினால் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்ப பட்டனர் .


கருத்துரையிடுக

 
Top