மஹிந்த ராஜபக்ஷ இம்முறை மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   எதிர்க்கட்சிகள் யாரை களமிறக்கினாலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகூடிய மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 27 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.   இந்த மேலதிக ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1.8 மில்லியன் களாக அதிகரித்தது.    

  இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதியவர்கள் மூன்று மில்லியன் வாக்குகளால் வெற்றி பெறுவாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

  வெளிச் சக்திகள் தொடர்ந்தும் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வருடங்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே எமக்கு அவசியம்.    அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே இந்த தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றனர்.    இவர்களுக்கு மக்களை பாதுகாக்கும் நோக்க மில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top