வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் , பௌத்த துறவியினால் கையகப்படுதப்பட பாலர்பாடசலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் தலையீட்டால் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது..
தொல்பொருள் பகுதிக்குள் வருவதாகவும் தான் 3 மாதம் அப் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்ததாலும் குறித்த பலர் பாடசாலை தனக்கு சொந்தம் என்று இராணுவத்தினரின் உதவியோடு பாலர்பாடசாலையினை அப்பகுதியில் இருக்கும் பெளத்த பிக்கு கையகப்படுத்தி இருந்தார் .
அதன் பின்னர் அப்பகுதி மக்களின் ஆர்ப்பாட்டத்தின் பலனால் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் விளைவாக அருகில் இருக்கும் பொதுக்கட்டிடத்தில் பாலர் பாடசாலை இயங்க முடியும் என்ற தீர்மானம் மக்களிடம் திணிக்கப்பட்டிருந்தது.
எனினும் அப்பாலர் பாடசாலை தொடர்பான விடயத்தை ஆராய வருகை தந்திருந்த தொல்பொருள் உதவி ஆணையாளர் (கிழக்கு மாகாணம்) அவர்களை கல்லடி பாலர் பாடசாலை அமைவிடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவருடன் பேசியதின் விளைவாக பாலர்பாடசாலை முன்பிருந்த அதே கட்டிடத்தில் இயங்க முடியும் எனவும் பாலர்பாடசாலை மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தொல்பொருள் உதவி ஆணையாளர் உறுதி அளித்தார்.


கருத்துரையிடுக

 
Top