( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

ஜனாதிபதின்   'செழிப்பான இல்லம்' வேலை திட்டத்தின் கீழ்  2,500 ரூபாய் கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு கல்முனை அல் -மி்ஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  நேற்று மாலை (18)இடம் பெற்றது.


கல்முனை  மாநகரசபை உறுப்பிர் ஏ.எம்.பறக்கத்துள்ளா    தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுமார் 1200 குடும்பங்களுக்கு தலா 2500 ரூபாய் கொடுப்பனவு வழங்கி  வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததுடன், இதில் திவிநெகும அதிகாரிகள் பலரும் கலந்து கொன்டனர்.


கருத்துரையிடுக

 
Top