(சுரேஸ்)
சமுதாய மட்ட அனர்த்தக் குறைப்பு நடவடிக்கைகளை உள்வாங்குவதன் ஊடாக சமூகத்தின் அனர்த்த மீள் திறனை கட்டியெழுப்புதல் எனும் கருத்திட்டத்தின் கீழ் உள்ளுர்  நிறுவனங்கள் வலைய அமைப்புக்களை இணங்காணலும் அவர்களை வலுப்படுத்தல் தொடர்பாகவும்  ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் நடைமுறைப் படுத்தும் திட்டத்தின் ஒக்ஸ்பாம் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் பயிற்சிப்பட்டறை தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் ஒக்ஸ்பாம் நிகழ்ச்சித்திட்ட முகாமமையாளர்  எஸ். ரகுநாதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
அதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்  எஸ்.இன்பராஜன்,அனர்த்த முகாமைத்துவ துறைசார்  வளவாளர்  எஸ்.ரமேஸ்வரன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளார் த.சரவணபவான் மற்றும் டிபேகோ ஏழு திட்டத்தின் பங்குதாரர்களாக  அமைந்துள்ள நிறுவனங்களின் திட்ட முகாமையாளர்கள் திட்ட உத்தியோகத்தர்கள் அத்துடன் மாவட்ட உள்ளுர்  அரசசார்பற்ற அமைப்புகள், சமூக தொண்டர்  நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும், சமாச பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சியின் போது அனர்த்த குறைப்பு, அனர்த்த முன்னாயத்தம், அனர்த்த முன்னெச்சரிக்கை, இலகுவில் பாதிப்புக்குள்ளாதல், அனர்த்த குறைப்பு கட்டமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

 
Top