பி. முஹாஜிரீன்

அக்கரைப்பற்று  கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் பிரிவினால் இரண்டு நாள் வதிவிட முதலுதவிப் பயிற்சி நேற்று  (01) சனிக்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் ஆரம்பமான முதலுதவி பயிற்சி நெறிக்கு சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி பிரிவின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.எஸ்.எம். மிப்றாஸ்கான் வளவாளராகக் கலந்துகொண்டார்.

இப்பயிற்சி நெறியில் இதயம், கால், கை மற்றும் எனைய உடலுறுப்புக்களில் ஏற்படக்கூடிய முறிவுகள் விபத்துக் காயங்கள் மற்றும் ஆஸ்த்மா சவாச நோய்கள் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளக்கான முதலுதவிப் பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படன .

கடேட் பிரிவைச் சேர்ந்த 60 மாணவ மாணவிகள் இம்முதலுதவிப் பயிற்சி நெறிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறபா வித்தியாலயத்தின் முதலுதவி ஆசிரியர் ஜே. பஸ்மிர் தெரிவித்தார்.Post a Comment

 
Top