கல்முனை மாநகரசபை உரிய பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்படுத்தாமை சிறுவன் மரணமடைந்தமைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம் .எம் ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
மேற்படி குற்றசாட்டை முன்வைத்துள்ளார் , அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு ,
இன்று கல்முனை இஸ்லாமபாத் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது நுஹைல் எனும் 13 வயது மாணவன் அகால மரணமடைந்தமைக்கு அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம் .எம் ஹரீஸ்
நேற்று (27) மாலை சுமார் 4 மணியளவில், இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில், கல்முனை மாநகரசபையால் மல, சல கூட கழிவகற்றலுக்காக நிர்மாணிக்கப் பட்டுவரும் குளிக்காக தோண்டப்பட்டிருந்த பாரிய கிடங்கில் மழை நீர் தேங்கியிருந்த சமயம், இச் சிறுவன் அதனுள் வீழ்ந்தமையால் உயிரிழந்துள்ளார்.
இதற்கு கல்முனை மாநகரசபை, இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது உரிய பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்படுத்தாமை அல்லது உரிய முறையில் கண்காணிக்கப்படாமையே காரணம் என அறியப்படுகிறது. மாநகர சபையின் இப் பொறுப்பற்ற தன்மையயை கண்டித்து இன்று அப் பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து மாநகர சபை முன்பாக ஆர்பாட்டமொன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
இத் துக்ககரமான சம்பவம்  தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்ட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களிடமும் ஏனைய உயர் அதிகாரிகளிடமும்  கோரிக்கை விடுத்துள்ளேன்.
இச்சிறுவனின் குடும்பத்தவர்களின் இவ் இழப்பு ஈடு செய்யப்பட முடியாததாகும். இச் சூழ்நிலையில் அவர்களின் துக்கத்தில்  நானும் துயருருகிறேன்.  

கருத்துரையிடுக

 
Top