கல்முனை மாநகர  சபையில் நேற்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற  நிலையில்  வைத்திய சாலையில்  வைத்து கல்முனை பொலிசாரால் கைது செய்யப் பட்ட கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  இன்று  நீதி மன்றால்  விடுதலை செய்யப் பட்டுள்ளார் .  ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப் பட்டதாக  பொலிஸ்  தகவல் தெரிவிக்கின்றன .

இதே வேளை  இன்று காலை  கைது செய்யப் பட்ட  மற்றுமொரு  மாநகர சபை உறுப்பினரான ஏ.நிசார்தீன்  கல்முனை நீதி மன்றால் 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளார் .

நேற்று கல்முனை மாநகர சபையில்  இடம் பெற்ற சம்பவத்தில் காயமடைந்த  மாநகர சபை உறுப்பினர்  பிர்தௌஸ் தொடர்ந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . 

கருத்துரையிடுக

 
Top